பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 'கற்போம், எழுதுவோம்' மையத்தில், படிப்பு அறிவு இல்லாத வயது வந்தோர் ஆர்வமாக கற்றுக்கொள்ள வருகின்றனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'கற்போம் எழுதுவோம்' மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி திட்டம் வாயிலாக நடைபெறுகிறது.மையத்தின் தற்போதைய தன்னார்வலர் சங்கீதா, வயது முதிர்ந்த பெரியோர்களுக்கு எண்ணும், எழுத்தும் சொல்லி கொடுக்கும் கற்பித்தல் ஈடுபட்டு வருகிறார்.கதை சொல்லுதல், கும்மி அடித்தல், நகைச்சுவை பேச்சு போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மகிழ்ச்சியோடு ஈடுபட்டு வருகின்றனர்.பள்ளி தலைமையாசிரியர் கணேசன், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர் கூறுகையில், 'தினமும் மாலை இரண்டு மணி நேரம் பள்ளிக்கு வருவதால் பள்ளி குழுந்தைகளாகவே மாறி கற்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை போன்று எழுத படிக்கத் தெரியாமல் இருக்கும் மற்ற வயது வந்தோர்களும், 'கற்போம், எழுதுவோம்' மையத்துக்கு வர வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE