சிவகங்கையில் 80 நிமிடம் 5 வயது முதல் 61 வயதுடைய 25 நபர்கள் (அப்டோமினல் பிளாங்) உடலை சம நிலையில்வைத்து சாதனை படைத்தனர்.
நிகழ்ச்சிக்கு சிவகங்கை டி.எஸ்.பி., சாந்தீஷ்,ஆர்.டி.ஓ.,முத்துக்கழுவன், நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரவின்குமார், தாசில்தார் மைலாவதி முன்னிலையில் நடந்தது. இதில் 5 வயது முதல் 61 வயது வரையுள்ளவர்கள் சிவகங்கை, தேனி, மதுரை,கோவை, சென்னை மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் உடலை சம நிலையில் 80 நிமிடம் வைத்து சாதனை படைத்தனர்.இதனை சோழன் உலக சாதனை புத்தகம் பதிவு செய்தது.
விட்டனேரி ஊராட்சித்தலைவர் வரதன், தேவஸ்தான சமஸ்தான மேலாளர் இளங்கோ, உதவும்கரங்கள் மாநில பொது செயலாளர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் முருகன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நீலமேகம் நிமலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கீழடியின் வரலாறு என்ற தலைப்பில் சர்வதேச அளவில் மொழி திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 14 பேருக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களையும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் வழங்கியது.இதில் 11 வெளி நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்ட இளையோர் கழகமும் துவக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இலவசமாக குத்துச்சண்டை, யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE