உடுமலை:தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன், திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம், திருமூர்த்திமலையில் நடந்தது. மாவட்டத்தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் குரு ராஜன், இணை அமைப்பாளர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர்.இதில், கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பணியாளர்களை, எந்த நிபந்தனையும் இல்லாமல், நிரந்தரம் செய்ய வேண்டும்.அத்தியாவசிய பணியாளர்களை, செயல் அலுவலர், தக்கார் மற்றும் அறங்காவலர்கள் தீர்மானத்தின் படி நிரந்தரம் செய்யவும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், மாவட்டத்தலைவராக சிவக்குமார், செயல் தலைவர் அங்கீஸ்வரன், செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் விஜயசந்திரன், அமைப்பாளராக ராஜமாணிக்கம், கொள்கை பரப்பு செயலாளராக சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில், அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE