பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் சோலையாகும் விவசாய நிலங்கள்

Added : டிச 21, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், இலக்கை தாண்டிய பயணமாக, 10 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு உடுமலை பகுதிகளிலும், இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.பசுமை

உடுமலை:உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், இலக்கை தாண்டிய பயணமாக, 10 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு உடுமலை பகுதிகளிலும், இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.பசுமை அதிகரிப்பு, மழை வளம் பெருக்கும் வகையிலும், மரச்சாகுபடியால் வனம் அழிப்பது தடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதால்,உடுமலை பகுதிகளில் மரக்கன்று நடுவதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதிலும், நீர் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறையால், விவசாயம் செய்ய முடியாமல், வீணாக உள்ள விளை நிலங்களில், குறைந்த நீர்த்தேவை மற்றும் பராமரிப்பு காரணமாக அதிகளவு விவசாயிகள் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.நேற்று, புக்குளம், வெள்ளியம்பாளையம் பிரிவு, விவசாயி கணேஷ்க்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில், மலைவேம்பு, தேக்கு, அத்தி என பல்வேறு வகையான, 1,070 மரக்கன்றுகள் நடப்பட்டன.அதே போல், புக்குளம் பாலமுருகனுக்கு சொந்தமான நிலத்தில், நிலத்தின் எல்லை வரப்புகளை சுற்றிலும், அதிக பலன் அளிக்க கூடிய, 300 மலைவேம்பு நடவு செய்யப்பட்டது.கோழிப்பண்ணைகள் அதிகளவு உள்ள நிலையில், இயற்கை சூழல், சுற்றுச்சூழல், சுகாதாரம் காக்கும் வகையில், கோழிப்பண்ணை உரிமையாளர்கள், பண்ணைகளை சுற்றிலும் பசுமை சோலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், பொன்னேரி அகிலா பார்ம்ஸ் மோகன்ராஜூக்கு சொந்தமான பண்ணையில், தேக்கு, கடம்பை, இலுப்பை என, 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க விரும்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X