பொது செய்தி

தமிழ்நாடு

நல்ல வாய்ப்பு!

Added : டிச 21, 2020
Share
Advertisement
அன்னூர்:ஊரக புத்தாக்க திட்டத்தில், தொழில் செய்ய விரும்பும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, 30 சதவீதம் மானியத்தில், அரசு கடன் வழங்கப்படுகிறது.தமிழக அரசின், ஊரக புத்தாக்க திட்டம், கோவை மாவட்டத்தில், அன்னூர், எஸ். எஸ்.குளம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய நான்கு ஒன்றியங்களில், 70 சதவிகித உலக வங்கி நிதி மற்றும் 30 சதவீத தமிழக அரசின் நிதியுதவியுடன்

அன்னூர்:ஊரக புத்தாக்க திட்டத்தில், தொழில் செய்ய விரும்பும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, 30 சதவீதம் மானியத்தில், அரசு கடன் வழங்கப்படுகிறது.தமிழக அரசின், ஊரக புத்தாக்க திட்டம், கோவை மாவட்டத்தில், அன்னூர், எஸ். எஸ்.குளம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய நான்கு ஒன்றியங்களில், 70 சதவிகித உலக வங்கி நிதி மற்றும் 30 சதவீத தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.அன்னூர் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு வாரமாக ஊராட்சிகளில் கணக்கெடுப்பாளர் மூலம் எவ்வளவு கால்நடைகள் உள்ளன, பணிக்கு செல்வோர், சுய தொழில் செய்வோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.தினமும் இளைஞர்கள், சமுதாய தலைவர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் என அழைத்து, ஊராட்சியின் தேவைகள் குறித்து ஆலோசனை கேட்கப்படுகிறது. இந்த கூட்டங்கள் முடிந்தபின், பொது மக்களிடமிருந்து கடனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் மூலம் ஒட்டுமொத்த ஊராட்சிகளில் என்ன முதலீடு தேவை என்பது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.குன்னத்தூர் ஊராட்சியில், வளர்ச்சித் திட்டம் தயாரிக்கும் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா பேசுகையில், ''ஊரக புத்தாக்க திட்டம் மக்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். சுய உதவிக் குழு உறுப்பினராக உள்ளவர்கள் தொழில் செய்வதற்கு, ஒரு லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் மானியமாக தரப்படும்.''இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மாவு விற்பது, காய்கறி கடை, தையல் என எந்த தொழிலாக இருந்தாலும் அது குறித்து தெளிவாக தெரிந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். தனிநபர் அல்லது 20 முதல் 25 பேர் வரை குழுவாக சேர்ந்தும் விண்ணப்பிக்கலாம்.''ஆதார் கார்டு, வங்கி கணக்கு அவசியம். தேவைப்படுவோருக்கு தொழில் செய்ய பயிற்சியும் தரப்படும். திட்டத்தில் பயன்பெற சுய உதவி குழு உறுப்பினர்கள், புத்தாக்க திட்ட அலுவலர் அல்லது ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகலாம்,'' என்றார்.சமூக வல்லுநர்கள் மகாலட்சுமி, மகேஸ்வரி, வறுமை ஒழிப்பு திட்ட கணக்காளர் சிவகாமி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயலாளர் நீலாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X