சூலூர்:''விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பல அம்சங்கள் புதிய வேளாண் சட்டத்தில் உள்ளன,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி பேசினார்.மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கண்ணம்பாளையத்தில் நடந்தது. சூலூர் தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், விவசாய அணி தலைவர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி பேசியதாவது:புதிய வேளாண் சட்டப்படி, பயிர் செய்யும் முன், விலையை நிர்ணயித்து, நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளமுடியும். அறுவடையின் போது, மார்க்கெட் விலை கூடுதலாக இருந்தால், அதை ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டு பெறலாம். அல்லது கூடுதல் விலை கிடைக்கும் இடத்தில் விற்றுக்கொள்ளலாம். பயிர் காப்பீட்டு தொகையை நிறுவனங்களே செலுத்தும்.மண்டிகள் மூடப்படாது. பயிருக்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்படும். விவசாயிகளின் நிலத்துக்கு கிடையாது. அதனால், அச்சப்பட தேவையில்லை. இதுபோன்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், பாதுகாக்கும் அம்சங்கள் சட்டத்தில் உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE