அன்னூர் தி.மு.க., இரண்டாக பிரிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்னூர் தி.மு.க., இரண்டாக பிரிப்பு

Added : டிச 21, 2020
Share
அன்னூர்:தி.மு.க.,வில், அன்னூர் ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக சத்தியமூர்த்தி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஒன்றியத்தில், 11 ஊராட்சியும், அன்னூர் பேரூராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தெற்கு ஒன்றியத்தில், பத்து ஊராட்சி ஒதுக்கப்பட்டுள்ளன.தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு

அன்னூர்:தி.மு.க.,வில், அன்னூர் ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக சத்தியமூர்த்தி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஒன்றியத்தில், 11 ஊராட்சியும், அன்னூர் பேரூராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தெற்கு ஒன்றியத்தில், பத்து ஊராட்சி ஒதுக்கப்பட்டுள்ளன.தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினராக, ஆர்.மோகனசுந்தரம், பி.மோகனசுந்தரம், சேதுபதி, செந்தில்குமார், சுப்பிரமணியம், முருகேசன், பொன்னுசாமி, மணி, ஜீவிதா, கவுதம் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழுவுக்கு, இளமுருகன், சிவான், சுகுமார், நடராஜ், தனலட்சுமி, சண்முக வேலாயுதம், பழனிச்சாமி, மகேந்திரன், வையாபுரி, அருள் மூர்த்தி, ஆனந்தன், விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X