திருப்புத்துார் : மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை ஆதரித்து திருப்புத்துார் ஒன்றிய கிராமத்தினரிடையே பா.ஜ.சார்பில் பிரசாரம் நடந்தது.
காரையூர், ஆத்திரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பா.ஜ.,மாநிலத்துணைத் தலைவர் குப்புராம் விவசாயிகளிடம் பேசியதாவது:விவசாயிகளின் நண்பர் மோடி என்பதை விவசாயிகளிடம் விளக்கி வருகிறோம். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் மண்டிகள் மூடப்படும்.விளை பொருட்களை முறையாக விற்க முடியாது என்று பொய் பிரசாரம் செய்கின்றனர். அப்படி எதுவும் சட்டத்தில் இல்லை. நல்ல விலைக்கு விற்க இன்னொரு வாய்ப்பாக சட்டம் வந்துள்ளது. சேமித்து விற்க முடியும் என்பதால் அடிப்படை ஆதாரவிலையை விட கூடுலாக விற்கவும், விவசாயிகளே விலை நிர்ணயிக்கவும் முடியும். பேச்சுவார்த்தைக்கே வராமல் சட்டத்தை ரத்து செய்ய சொல்கின்றனர், என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE