பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்ட தீர்மானம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பிரதிநித்துவ பேரவை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அமைப்பின் பதாகையை மாவட்ட செயலாளர் சுகுமார் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தலைவர் பிரபாகரன் தலைமையில் மகளிர் துணைக்குழு பேரவை நடந்தது.

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட பிரதிநித்துவ பேரவை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்பின் பதாகையை மாவட்ட செயலாளர் சுகுமார் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தலைவர் பிரபாகரன் தலைமையில் மகளிர் துணைக்குழு பேரவை நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ராஜேஸ்வரி, மாலதி முன்னிலை வகித்தனர். சகுந்தலா வரவேற்றார். ராக்கு அறிக்கை சமர்ப்பித்தார். மஞ்சுபாரதி தீர்மானங்களை முன் மொழிந்தார்.

சங்கரபரமேஸ்வரி, பானுமதி, பர்வதவர்த்தினி வாழ்த்தினர். தமிழாசிரியர் இளங்கோ நிறைவுரையாற்றினார். மாவட்ட பிரதிநிதித்துவப்பேரவை கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் வரவேற்றார்.துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயலாளர் செல்வக்குமார் பேசினார். மாவட்ட செயலாளர் சுகுமார் வேலை அறிக்கையும், பொருளாளர் அருணகிரி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், விடுதி ஊழியர்கள் சங்க மாநிலத்தலைவர் நவநீதகிருஷ்ணன், சத்துணவு ஊழியர்கள் சங்க வட்டார தலைவர் நடராஜன், சாலைப்பணியாளர் சங்கத்தலைவர் முத்தையா, மூத்த உறுப்பினர் ஜெகநாதசுந்தரம் வாழ்த்தினர்.

கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய கட்டடங்களில் இயங்கி வரும் ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தின் போது ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X