சிவகங்கை : டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட் டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிநடந்தது.
சிவகங்கை: அரண்மனை முன்பாக நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், ம.தி.மு.க., நகர் செயலாளர் சுந்தரபாண்டியன் காங்., மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். உயிரிழந்தவிவசாயிகள் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கல்லல்: மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட்ஒன்றிய செயலாளர் குணாளன் மற்றும் நிர்வாகிகள்அஞ்சலி செலுத்தினர்.திருப்புவனம்: மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, இந்தி கம்யூ., ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேகர் உட்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE