காரைக்குடி : சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாட்சி குடியிருப்புக்கு வரவிருந்த அம்மா மினி கிளினிக்கை வேறு பகுதிக்கு மாற்றியதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
சாக்கோட்டையில் உள்ள சிறுகப்பட்டி ஊராட்சியில், பெத்தாட்சிகுடியிருப்பு, மணக்குடி, மித்திரன்குடி, சிறுகப்பட்டி, ஆயினிப்பட்டி, ஆயினிமனை, புளியங்குடியிருப்பு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெத்தாட்சிகுடியிருப்பில் உள்ள துணை சுகாதார மையக்கட்டடத்தில் அம்மா மினி கிளினிக் வரவிருந்த நிலையில், திடீரென சிறுகப்பட்டியில் உள்ள நுாலக கட்டடத்தில் மினி கிளினிக் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. பெத்தாட்சி குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் சாலைமறியல் செய்ய முற்பட்டனர்.
சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
உடையப்பன் கூறுகையில்; பெத்தாட்சி குடியிருப்பை சுற்றிலும் 8 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சிறுகப்பட்டியில் இருந்து 1 கி.மீ., துாரம் உள்ள பீர்க்கலைக்காட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால், எங்கள் பகுதியில் இருந்து அங்கு செல்ல 7 கி.மீ., வரை ஆகிறது. பெத்தாட்சி குடியிருப்பில் கிளினிக் வரவுள்ளதை அறிந்து வயதானவர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலரும் நிம்மதியாகஇருந்தனர். ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் மினி கிளினிக் துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE