காரைக்குடி : கானாடுகாத்தான் சந்தையில், முகக்கவசம் அணியாத வியாபாரிகளிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கானாடுகாத்தான் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமையில் சந்தை கூடுவது வழக்கம். கானாடு காத்தான், சூரக்குடி, நேமத்தான்பட்டி, நங்கபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர்.இங்கு 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். இவர்களிடம் சந்தையில் கடை நடத்த ரூ.50 வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பேரூராட்சியினர் வாரந்தோறும் வியாபாரிகளை மட்டும் குறி வைத்து முகக்கவசம் அணியாததற்கு ரூ.200 வீதம் அபராதம் விதிப்பதாக கூறுகின்றனர்.
வியாபாரிகள் தெரிவிக் கையில்; கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை அனைவருக்கும் பொதுவானது. சந்தைக்கு வரும் மக்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. எங்களிடம் கெடுபிடி காட்டும் அதிகாரிகள் மக்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE