பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி மீனாட்சி கோயிலில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா

Added : டிச 21, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனிசன்னதியில் உள்ள பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடந்தது.டிச., 14 மாலை 7:00 மணிக்கு சித்திவிநாயகருக்கு அனுக்ஞை தீபாராதனை நடந்தது.டிச.,15 தொடங்கி, டிச.,20 வரை, பைரவருக்குஹோமம், அபிேஷகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினமும் பைரவர் விபூதிகாப்பு, பச்சைசாத்தி, சிவப்பு, வெள்ளை சாத்தி அலங்காரத்தில்

பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனிசன்னதியில் உள்ள பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடந்தது.

டிச., 14 மாலை 7:00 மணிக்கு சித்திவிநாயகருக்கு அனுக்ஞை தீபாராதனை நடந்தது.டிச.,15 தொடங்கி, டிச.,20 வரை, பைரவருக்குஹோமம், அபிேஷகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமும் பைரவர் விபூதிகாப்பு, பச்சைசாத்தி, சிவப்பு, வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காணப்பட்டார்.நேற்று காலை 6:00 மணி தொடங்கி சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்டபைரவ யாகம், பூர்ணாகுதி நடந்தது. அப்போது சித்தி விநாயகர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, பைரவர், முருகப்பெருமானுக்கு விசேஷ அபிேஷகம்நடந்தது.

மாலை 6:00 மணிக்குஅஷ்ட வித்யார்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது.இன்று காலை 10:00 மணிக்கு பைரவருக்கு வெள்ளி கவசம்அணிவிக்கப்பட்டு,பாவாடை நைவேத்தியம், தீபாராதனையும், 12:00 மணிக்கு அன்னதானம்நடக்கிறது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X