தமிழ்நாடு

கரிமூட்டம் போடமுடியாத நிலை; வேதனையில் தொழிலாளர்கள்

Added : டிச 21, 2020
Share
Advertisement
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, நயினார்கோவில், போகலுார், பரமக்குடி ஒன்றியங்களில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதன் மூலம் விவசாயிகள் உள்ளிட்ட கூலித்தொழிலாளர்கள் பலரும் தங்களது நிலங்களில்கரிமூட்டம் போடுவதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.தற்போது பெய்து வரும் மழையையடுத்து, கருவேல மரங்கள் வளர்ந்துஉள்ள இடத்தில் தண்ணீர்தேங்கி

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, நயினார்கோவில், போகலுார், பரமக்குடி ஒன்றியங்களில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதன் மூலம் விவசாயிகள் உள்ளிட்ட கூலித்தொழிலாளர்கள் பலரும் தங்களது நிலங்களில்கரிமூட்டம் போடுவதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையையடுத்து, கருவேல மரங்கள் வளர்ந்துஉள்ள இடத்தில் தண்ணீர்தேங்கி நிற்கிறது. இதனால் மரம் வெட்டும் தொழில் செய்ய முடியாமல் உள்ளது. இத்துடன் வெட்டி வைக்கப்பட்ட மரக்கட்டைகளையும் கரிமூட்டம் போடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக கொரோனா நாட்களில் வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு கரிகளை விற்பனை செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான மூடைகள் தேங்கி கிடக்கின்றன.இந்நிலையில் 25 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கரி,தற்போது ரூ. 12 முதல் 15 வரை என விலை கிடைப்பதாகவும், தொடர்ந்து மழை முடிந்து வெயில் சீசன் ஆரம்பித்தால் மட்டுமே தொழில் சூடுபிடிக்கும் என்கின்றனர், உற்பத்தியாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X