ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் டிச.,23 முதல் 29 வரை கொண்டாடப்பட உள்ளது.தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், இளந்தமிழர், இலக்கியபயிற்சிபட்டறை மாணவர்கள் இணைந்து சமூக இடைவெளியுடன் கொண்டாடப்படஉள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள்முதலான ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான நோட்டீஸ், துண்டறிக்கை வழங்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE