ராமநாதபுரம் : புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு ராமநாதபுரத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் 33 விவசாயிகள் உயிரிழந்தனர்.ராமநாதபுரம் தாலுகா அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நேற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. விவசாயிகளின் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், இந்திய கம்யூ., ராமநாதபுரம் நகர், ஒன்றிய செயலாளர் களஞ்சியம் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் வக்கீல் முருகபூபதி, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் கலையரசன்உட்பட பலர் பங்கேற்றனர்.
* டில்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில், அதில் உயிர்இழந்த விவசாயிகளுக்கு பரமக்குடி காந்தி சிலை முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE