ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுார் மற்றும் அத்தானுார் பகுதி நெல் பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனுார், அத்தானுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 2000 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் பருவமழை கைகொடுத்ததால், நெல் பயிர்கள் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், காவனுார், அத்தானுார் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களில் அதிகளவில் பூச்சி தாக்குதலால், நெல் பயிர்களின் தோகை வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் மாறியுள்ளதுடன் பயிர்களின் வளர்ச்சி குன்றியுள்ளன.
ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து உரம் மற்றும்பூச்சி மருந்துகள்தெளித்தும் எந்தவித பலனும் இல்லாததால், அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எனவே சம்மந்தப்பட்டவேளாண்மை துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நெல் பயிரில் பூச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE