பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயத்தில் பரவுது 'திருகல் நோய்'; வல்லுநர் ஆலோசனை

Added : டிச 21, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : 'சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து', காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ஷாகின்தாஜ் ஆலோசனை வழங்கினார்.அவர் தெரிவித்தது: மழையால் சின்ன வெங்காயம் தவளை நோய் திருகல் என்ற பூஞ்சாண நோயால் பாதிக்கப்படுகிறது. அதனால் வெங்காய தாள்கள் திருகி கொள்கிறது. ஆரம்பத்தில் இலைகளில் வெளிர் மஞ்சள் நிற

திண்டுக்கல் : 'சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து', காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ஷாகின்தாஜ் ஆலோசனை வழங்கினார்.

அவர் தெரிவித்தது: மழையால் சின்ன வெங்காயம் தவளை நோய் திருகல் என்ற பூஞ்சாண நோயால் பாதிக்கப்படுகிறது. அதனால் வெங்காய தாள்கள் திருகி கொள்கிறது. ஆரம்பத்தில் இலைகளில் வெளிர் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். பின் இப்புள்ளிகள் பெரிதாகி இலை முழுவதும் பரவும். இலைகள் திருகி செடியின் தண்டு பகுதி நீண்டு வளர்ந்து காணப்படும்.நோய் தீவிரமானால் 100 சதவீதம் இழப்பு ஏற்படும்.

இந்நோய் உண்டாக்கும் பூஞ்சை காரணிகள் மண், வெங்காய கழிவுகளில் நீண்ட காலத்திற்கு தங்கியிருக்கும். மேக மூட்டமான கால நிலைகளில் இந்நோய் வேகமாக பரவும்.தடுக்கும் வழிஇதை தடுக்க வெங்காய நடவுக்கு நோயற்ற காய், விதைகளை பயன்படுத்த வேண்டும். நோய் தாக்குதல் உள்ள வயல்களில் நடக் கூடாது. நோய் அறிகுறி கண்டவுடன் அந்த செடிகளை எரித்து விட வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு வெங்காயம் தவிர, பிற பயிர்களை சாகுபடி செய்யலாம். நடவு செய்யும் முன் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். விதைகள், காய்களை கிலோ ஒன்றுக்கு 2 கிராம் விட்டாவாக்ஸ் மருந்து மூலம் நேர்த்தி செய்ய வேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்த 2 சதவீதம் கார்பெண்டாசிம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X