சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி:பின்னணியில் சீட்டு விவகாரம்

Added : டிச 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:தாராபுரத்தில் நகை சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நகை கடைக்காரர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் ஹரி ஜெகநாதன்,38. நகைக்கடை நடத்தி வருகிறார். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், நகை சீட்டில் இணைந்து, மாதம், 1,000 ரூபாய்

திருப்பூர்:தாராபுரத்தில் நகை சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நகை கடைக்காரர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் ஹரி ஜெகநாதன்,38. நகைக்கடை நடத்தி வருகிறார். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், நகை சீட்டில் இணைந்து, மாதம், 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி வந்தனர்.சீட்டு முதிர்வடைந்த நிலையில், கட்டிய பணத்துக்கு, நகையை கேட்ட போது, நகையை வழங்காமல், கடை உரிமையாளர் இழுத்தடிப்பு செய்துள்ளார். கடந்த, 18ம் தேதி இரவு, கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், குடும்பத்துடன் திருச்சி சென்றிருந்த ஹரி, ஓட்டல் அறையில், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஹரி, அவரது தந்தை, தாய், மனைவி, மகள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.போலீசார் கூறுகையில்,'நகை சீட்டு மோசடி செய்ததாக, இதுவரை, 310 புகார் மனுக்கள் வந்துள்ளன; நகை சீட்டு வாயிலாக, 3.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X