பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் முள் எலி மீட்பு

Added : டிச 21, 2020
Share
Advertisement
வடமதுரை, : வடமதுரையில் ரோட்டில் சுற்றித்திரிந்த முள் எலி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.இப்பகுதி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதி கல்லுாரி மாணவர் கார்த்தீபன். இப்பகுதியில் இருக்கும் கோயிலுக்கு சென்ற போது ரோட்டில் கருப்பு, வெள்ளை நிற முள்ளுடன், பந்து போன்று ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதை கையில் பிடித்தார். அது அரிய வகை முள் எலி என்பது தெரிய வந்ததும்,

வடமதுரை, : வடமதுரையில் ரோட்டில் சுற்றித்திரிந்த முள் எலி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்பகுதி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதி கல்லுாரி மாணவர் கார்த்தீபன். இப்பகுதியில் இருக்கும் கோயிலுக்கு சென்ற போது ரோட்டில் கருப்பு, வெள்ளை நிற முள்ளுடன், பந்து போன்று ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதை கையில் பிடித்தார். அது அரிய வகை முள் எலி என்பது தெரிய வந்ததும், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர் குமரேசன் கூறுகையில்,'' வனத்தில் வசிக்கும் முள் எலியை இரவில் மட்டுமே பார்க்க முடியும். அழிந்து வரும் இந்த உயிரினத்தை வேட்டையாடுவது குற்றம். மீட்கப்பட்ட முள் எலி வனப்பகுதியில் விடப்பட்டது'' என்றார்.

மரநாய் மீட்பு:

வத்தலக்குண்டு அ.ம.மு.க., மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் மணிகண்டன். வடக்கு தெருவில் உள்ள இவரது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் இருந்த வினோத விலங்கு திடீரென வீட்டிற்குள் புகுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் அரிய விலங்கை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அது மரநாய் என்பது தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X