பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி தேர்ச்சி முறை: குழப்பத்துக்கு தீர்வு

Added : டிச 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:'ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் அரையாண்டு தேர்வுக்கும், மாணவரின் இறுதியாண்டு தேர்ச்சிக்கும் தொடர்பில்லை' என, கல்வித்துறை விளக்கமளித்துள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர்.பெற்றோரின் கருத்தை அறிந்த பின்பே, பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், 'அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து

திருப்பூர்:'ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் அரையாண்டு தேர்வுக்கும், மாணவரின் இறுதியாண்டு தேர்ச்சிக்கும் தொடர்பில்லை' என, கல்வித்துறை விளக்கமளித்துள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர்.பெற்றோரின் கருத்தை அறிந்த பின்பே, பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், 'அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள், விரும்பினால், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை சில பள்ளிகள் முடுக்கிவிட்டுள்ளன.'இதுவரை, மாணவர்களுக்கு ஆன்-லைன் வாயிலாக நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே, தேர்வு நடத்த வேண்டும். அரையாண்டு தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்து, மாணவர்களின் இறுதியாண்டு தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது' என, கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கல்வித்துறை அளித்துள்ள விளக்கம், மாணவர், பெற்றோர் மத்தியில் நிலவிய குழப்பத்தை போக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X