பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் அதிகமாக வருகின்றனர். நேற்று மார்கழி பூஜையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர்.இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
மலைக்கோயிலில் செல்ல குடமுழுக்கு மண்டபம் முதல் பாதவிநாயகர் கோயில் வரை காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். காலை முதல் மாலை வரை கூட்டத்தை கட்டு ப்படுத்தவும் மலைக்கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியே கடைபிடிக்கவும் போலீசார் அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE