பழநி : பழநியில் விளைநிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. பழநி, வெட்டுக்கோம்பை, அய்யம்புள்ளி பகுதிகளில் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. மற்ற விலங்குகளை காட்டிலும் காட்டு பன்றிகளின் தாக்குதலே அதிகளவில் உள்ளது.
இரவு நேரத்தில் உணவு தேடி வரும் யானைகளால் அப்பகுதியில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர். தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளை சேதப்படுத்துகின்றன. வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE