வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்

Added : டிச 21, 2020
Share
பழநி : பழநியில் விளைநிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. பழநி, வெட்டுக்கோம்பை, அய்யம்புள்ளி பகுதிகளில் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்

பழநி : பழநியில் விளைநிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

பழநி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. பழநி, வெட்டுக்கோம்பை, அய்யம்புள்ளி பகுதிகளில் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. மற்ற விலங்குகளை காட்டிலும் காட்டு பன்றிகளின் தாக்குதலே அதிகளவில் உள்ளது.

இரவு நேரத்தில் உணவு தேடி வரும் யானைகளால் அப்பகுதியில் வசிப்போர் அச்சமடைந்துள்ளனர். தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலிகளை சேதப்படுத்துகின்றன. வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X