பொது செய்தி

தமிழ்நாடு

ைஹவேவிசில் பனிமூட்டம்; வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

Added : டிச 21, 2020
Share
Advertisement
சின்னமனுார் : ைஹவேவிஸ் ரோட்டில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேகமலையில் ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட பல மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் இங்குள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆவர். சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. அவ்வப்போது

சின்னமனுார் : ைஹவேவிஸ் ரோட்டில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேகமலையில் ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட பல மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் இங்குள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆவர். சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது.

அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. இதனால் காற்றின் ஈரப்பதம் உச்சபட்சமாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எதிரில் வருபவர்கள் கூட தெரியாத நிலையில் பனிமூட்டம் சூழ்கிறது. எனவே ைஹவேவிஸ் ரோட்டில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர், போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X