பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் வருகை அதிகரிப்பு; ராஜமலை செல்ல காத்திருப்பு

Added : டிச 21, 2020
Share
Advertisement
மூணாறு : மூணாறில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ராஜமலைக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம்காத்திருக்க நேரிட்டது.மூணாறில்இரு நாட்களாக பயணிகளின் வருகை அதிகரித்ததால் மாட்டுபட்டி, குண்டளைஅணை,எக்கோ பாய்ண்ட், ராஜமலை சுற்றுலா பகுதிகள் களை கட்டின. இரவிகுளம் தேசிய பூங்கா, ராஜமலையில் வரையாடுகளை காணச் செல்லும் பயணிகள் 5ம் மைலில் நுழைவு சீட்டு பெற்று

மூணாறு : மூணாறில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ராஜமலைக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம்காத்திருக்க நேரிட்டது.

மூணாறில்இரு நாட்களாக பயணிகளின் வருகை அதிகரித்ததால் மாட்டுபட்டி, குண்டளைஅணை,எக்கோ பாய்ண்ட், ராஜமலை சுற்றுலா பகுதிகள் களை கட்டின. இரவிகுளம் தேசிய பூங்கா, ராஜமலையில் வரையாடுகளை காணச் செல்லும் பயணிகள் 5ம் மைலில் நுழைவு சீட்டு பெற்று வனத்துறையினரின் மினி பஸ்களில் அழைத்துச் செல்கின்றனர். அங்கு நேற்று கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தனர்.

அதிருப்தி: இரவிகுளம் தேசிய பூங்காஆக.,19ல் திறக்கப்பட்டபோதுமினி பஸ்சில் 50 சதவிகிதம் பயணிகள் என்ற அடிப்படையில் நுழைவுகட்டணம் ரூ.125ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது பஸ்சில் 100 சதவிகிதம் பயணிகள் பயணிக்கின்றனர். இருப்பினும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை இல்லாததால் நடுத்தர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பஸ்களில் கிருமிநாசினி தெளித்தல்உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கையால்செலவு அதிகரிப்பதாகவும்,கொரோனா கட்டுக்குள் வந்தவுடன்கட்டணம் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X