மூணாறு : மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் சுவரை இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு காட்டு யானைகள் மீண்டும் சேதப்படுத்தின.அங்கு இரண்டு மாதங்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.அவை அக்.24 இரவில் கன்னியம்மன் கோயில் சுவரையும், அருகில் உள்ள ெஷட்டையும்சேதப்படுத்தியது. அந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கோயில் சுவரை மீண்டும் சேதப்படுத்தியது. அவை அவ்வப்போது பகலில் ரோடுகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் வலம் வருவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE