திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட்டில் திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு ஊழியர்கள் தகராறில் ஈடுபடுவது தொடர்கிறது.
திருமங்கலம் நகர் பகுதி எல்லையில் இருந்து 1.5 கி.மீ., துாரத்திற்குள் உள்ள கப்பலுார் டோல்கேட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறைபடி திருமங்கலம் பகுதி வாகனங்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட வேண்டும். சில ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட நிலையில் 2019 'பாஸ்ட்டேக்' முறை அமல்படுத்தப்பட்ட போது திருமங்கலம் வாகன ஓட்டிகளும் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் கூற, அமைச்சர் உதயகுமார் தலையீட்டால் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் டோல்கேட்டை பராமரிக்கும் புதிய நிர்வாகம், கட்டணம் கேட்டு தகராறு செய்கிறது. சில நாட்களுக்கு முன் திருமங்கலம் அனைத்து வாகன உரிமையாளர்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் தினமும் தகராறில் ஈடுபடும் டோல்கேட் நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் எல்லையில் இருந்து 5 கி.மீ., அப்பால் டோல்கேட்டை இடமாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE