ஐ.டி., ஊழியர் கொலை
மதுரை: உத்தங்குடி ராம்நகரில் வசித்தவர் ஐ.டி., ஊழியர் குமரன்தாஸ் 42. மனைவி, இரு குழந்தைகள் திருச்சியில் உள்ளனர். நேற்று காலை சமையல்காரர் வந்தபோது வீட்டினுள் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். புதுார் போலீசார் விசாரணையில், உடன் தங்கி சமையல் செய்து தந்த உ.பி.,யைச் சேர்ந்த ராம்ஆனந்த கவுதம் 26, கொலை செய்தது தெரிந்தது. ரயிலில் தப்பிச்செல்ல விடுதியில் காத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். ஓரின சேர்க்கை 'டார்ச்சர்' காரணமாக குமரன்தாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
நுாதன திருட்டு
மதுரை: தத்தனேரியில் பாலமுத்தழகு பைனான்ஸ் உள்ளது. உரிமையாளர் கையெழுத்து போட்ட காசோலைகளில் ஒன்றை எலக்ட்ரீசியன் அருள்முருகன் திருடினார். அதில் ரூ. 92 ஆயிரம் எழுதி சத்திரவெள்ளாளபட்டி சிலம்பரசன், கார்த்திக் மூலம் அவ்வூர் மணிகண்டன் மூலம் வங்கியில் எடுத்தார். இதற்கு கமிஷனாக மணிகண்டனுக்கு ரூ. 2 ஆயிரம் தரப்பட்டது. இந்த நுாதன திருட்டு வங்கி பரிவர்த்தனை மூலம் தெரியவந்தது. செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் டிரைவர் பலி
மேலுார்: மதுரை குத்துசண்டை வீரர் முத்துகணேஷ் 30. நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றார். மதுரை டிரைவர் சதீஷ் 30, ஓட்டினார். இரவு 2:00 மணிக்கு சிட்டம்பட்டி டோல்கேட் நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் மதுரை - திருச்சி தனியார் பஸ் மீது மோதியது. இதில் சதீஷ் இறந்தார். முத்துகணேஷ் காயத்துடன் மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE