திருமங்கலம் : திருமங்கலம் கிளை நுாலகம், டில்லி நேஷனல் புக் டிரஸ்ட், மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து பி.கே.என்., ஆண்கள் பள்ளியில் தேசிய புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.கிளை நுாலகர் இளங்கோ வரவேற்றார். பொது நுாலகத்துறை இயக்குனர் நாகராஜமுருகன் தலைமை வகித்தார்.மாவட்ட பொது நுாலக அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். திருமங்கலம் கிளை நுாலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறையை சேர்ந்த 100 பேருக்கு உறுப்பினர் அட்டையை அமைச்சர் வழங்கினார். ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், பாசறை செயலாளர் ஆர்யா கலந்து கொண்டனர். நுாலகர் மலர்விழி நன்றி கூறினார்.டிச.,30 வரை நடக்கும் கண்காட்சியில் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE