பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் தபால் ஓட்டளிக்கும் முறையில் மாற்றம்; மாநில தலைவர் வலியுறுத்தல்

Added : டிச 21, 2020
Share
Advertisement
மதுரை : “தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவம் ஓட்டுச் சாவடியில் வழங்கி அங்கேயே ஓட்டளிக்க உரிமை அளிக்க வேண்டும்” என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் சுரேஷ் வலியுறுத்தினார்.மதுரையில் இச்சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சந்திரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், மாநில

மதுரை : “தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவம் ஓட்டுச் சாவடியில் வழங்கி அங்கேயே ஓட்டளிக்க உரிமை அளிக்க வேண்டும்” என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் சுரேஷ் வலியுறுத்தினார்.

மதுரையில் இச்சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் சுரேஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சந்திரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், மாநில நிர்வாகிகள் சிவக்குமார், அஜீஸ்குமார், உக்கிரபாண்டியன், செல்வக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சுரேஷ் பேசுகையில் “மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்தி 10 சதவீதம் அரசு, 5 சதவீதம் உதவிபெறும் பள்ளி மாணவருக்கு வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஓட்டுச்சாவடியிலேயே தபால் ஓட்டு படிவம் வழங்கி ஓட்டளிக்கும் உரிமை வழங்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் ஷிப்ட் முறையில் மாணவர்களை வரவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து முறையான பதவிஉயர்வு வழங்க வேண்டும். உயர்கல்வி ஊக்க ஊதியம் ரத்து உத்தரவை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X