சென்னை : ''பாரதியின் ஒவ்வொரு கவிதையும் இந்திய கலாசாரத்தின் உச்சம்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியின் 138வது பிறந்த நாள் விழா பாரதி திருவிழாவாக 10 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா இணைய வழியில் நேற்று நடந்தது.
அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசியதாவது: பாரதி திருவிழாவின் துவக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமரின் மனதில் பாரதியின் கவிதைகள் ஆழப் பதிந்ததற்கு அவர் பேசிய கவிதைகளே உதாரணம். பிரதமர் தான் பேசக்கூடிய ஒவ்வொரு சபையிலும் பாரதியின் கவிதைகளை எடுத்துக்கூறி வருகிறார்.

பாரதியின் கவிதைகளில் இருந்து எனக்கு பிடித்த அனுபவப்பூர்வமாக உணர்ந்த அவரது மூன்று குணங்கள் உள்ளன. அவை சுயநலமில்லாமல் நாட்டு மக்களுக்காக கடவுளிடம் வேண்டுதல்; மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்த கடவுளிடம் வேண்டுதல்; சோர்வு தளர்ச்சி இல்லை; நம்பிக்கை இழக்காத நிலை போன்றவற்றை பாடல்கள் வாயிலாக உண்ர்ந்துள்ளேன்.
மேலும் பாரதியின் கவிதைகளை இந்திய கலாசாரத்தின் உச்சமாகவும் வரைபடமாகவும் பார்க்கிறேன். நாட்டின் அனைத்து தரப்பு மக்கள் குறித்தும் அவர்களது குணங்கள் குறித்தும் தன் பாடல்களில் ரசித்து எழுதியுள்ளார். பாரதியை எப்போது படித்தாலும் புதிது புதிதாக தோன்றுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் பாரதி பெட்டகம் வானவில் சிறுகதைகள் ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE