அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி கட்சிக்கு புதுச்சேரியிலும் ஆட்டோ?

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுச்சேரி: மக்கள் சேவை கட்சிக்கு, தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது, தேர்தல் ஆணையம். இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளவர், துாத்துகுடியிலுள்ள ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர். 'இது தான் ரஜினியின் கட்சி; பாட்ஷா பட ஆட்டோ தான் அவர் சின்னம்' என, செய்திகள் வெளியாகின. ரஜினி தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு வரவில்லை.ஆனால், கட்சியின்

புதுச்சேரி: மக்கள் சேவை கட்சிக்கு, தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது, தேர்தல் ஆணையம். இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளவர், துாத்துகுடியிலுள்ள ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர். 'இது தான் ரஜினியின் கட்சி; பாட்ஷா பட ஆட்டோ தான் அவர் சின்னம்' என, செய்திகள் வெளியாகின. ரஜினி தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு வரவில்லை.



latest tamil news


ஆனால், கட்சியின் பெயரை ரஜினி விரைவில் அறிவிப்பார் பொறுத்திருங்கள் என சொல்லப்பட்டது.இதற்கிடையே, இந்த மக்கள் சேவை கட்சி, தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளது.தமிழகத்திற்கு தேர்தல் சின்னம் கேட்கும் போதே, புதுச்சேரிக்கும் கேட்டிருக்க வேண்டும்.


latest tamil news


ஆனால், அது விடுபட்டு போனதால், தற்போது மனு அளித்துள்ளது, மக்கள் சேவை கட்சி. இது குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.இது குறித்து டில்லியில் மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரிடம், அவர் உயிருடன் இருந்த போது ரஜினிக்கு நல்ல பழக்கம். அந்த அமைச்சரின் மகனும், மகளும் வழக்கறிஞர்கள். 'ஏற்கனவே பதிவு செய்துள்ள கட்சியை நம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா... அப்படி செய்தால் சட்ட பிரச்னை வருமா' என, அந்த அமைச்சரின் குடும்பத்தினருடன், ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.'சட்டப்படி எந்த பிரச்னையும் வராது' என, அந்த முன்னாள் அமைச்சரின் வாரிசுகள் தெரிவித்துள்ளனராம்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-டிச-202019:46:55 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN செல்வாக்கு உள்ளதுபோல்தான் தெரியும் . ஆனால் ஊழல் பெருச்சாளி கட்சிகள் பணம்கொடுத்து ஓட்டை பெறுவார்கள் .அப்போ நேர்மைக்கு வாய்ப்பு குறைவே எனவே லஞ்சம் கொடுக்காமல் பெறாமல் வாக்குபதிவு நடைபெறாது. ஏன் அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஊதியம் பெறுவதோடு தேர்தல் பணிக்கு என தனி ஊதியம் என்றபெயரால் கொடுப்பதும் ஒருவித லஞ்சம் என்றே கொள்ளலாம் .அப்படி இருக்க பாமர மக்கள் மட்டும் சும்மா ஓட்டு போடுவது ......
Rate this:
Cancel
Venkatesh - bangalore,இந்தியா
21-டிச-202017:46:25 IST Report Abuse
Venkatesh புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மன நிலை மருத்துவ மனை பிரிவில் அறுவது வயதை கடந்த பல நூறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று செய்தி
Rate this:
Cancel
Venkatesh - bangalore,இந்தியா
21-டிச-202017:41:25 IST Report Abuse
Venkatesh கண்ணாடியை திருப்பியாவது ஸ்டார்ட் பண்ணிடுங்க தலைவரே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X