இம்பால்: மணிப்பூரில், போதை மருந்து வழக்கில், நீதிமன்றத்தால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, தனக்கு வழங்கப்பட்ட வீரதீர செயலுக்கான பதக்கத்தை, பெண் போலீஸ் அதிகாரி, மாநில அரசிடமே திருப்பி அளித்தார்.
வடகிழக்கு மாநிலமான, மணிப்பூரில், முதல்வர் பிரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, ஏ.எஸ்.பி., எனப்படும், போலீஸ் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர், தவுநவ்ஜாம் பிருந்தா.இவர், பா.ஜ.,வை சேர்ந்த, சந்தல் மாவட்ட கவுன்சில் முன்னாள் தலைவர், லகோசே ஸோ உட்பட, ஏழு பேரை, போதை மருந்து வழக்கில், 2018ல் கைது செய்தார். இவர்களிடம் இருந்து, ஏராளமான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன.அதே ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவின் போது, போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கையில், வீரதீர செயல் புரிந்ததற்காக, ஏ.எஸ்.பி., பிருந்தாவுக்கு, பதக்கம் வழங்கி, மாநில அரசு கவுரவித்தது.இந்நிலையில், வழக்கை விசாரித்த போதை மருந்து தடுப்பு நீதிமன்றம், பா.ஜ.,வை சேர்ந்த, லகோசே உட்பட, ஏழு பேரையும் விடுவித்தது.
வழக்கு விசாரணை, திருப்திகரமாக நடைபெறவில்லை' என, நீதிமன்றம் தெரிவித்தது.இதையடுத்து, வீரதீர செயலுக்காக தனக்கு வழங்கப்பட்ட விருதினை, மாநில அரசிடம் திருப்பி ஒப்படைப்பதாக, போலீஸ் அதிகாரி பிருந்தா, அரசுக்கு கடிதம் எழுதினார்.அதில், 'வழக்கு விசார ணையில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து இருப்பதால், இந்த விருதுக்கு நான் தகுதியானவர் என கருதவில்லை. இதற்கு உண்மையிலேயே தகுதியானவரை அடையாளம் பார்த்து, அவருக்கு இந்த விருதை அளிப்பதே நியாயமாக இருக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE