அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: மாப்பிள்ளை தோழனாக இருக்கணும்!

Updated : டிச 22, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :திரா.திருவேங்கடம், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், மாப்பிள்ளை தோழன் மாதிரி இருக்கணும்' என்றார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.அதன் பொருள் என்னவென்றால், ஆளுங்கட்சியை எதிரி போல பாவித்து, எதிர்க்கட்சித் தலைவர் செயல்படக்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

திரா.திருவேங்கடம், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், மாப்பிள்ளை தோழன் மாதிரி இருக்கணும்' என்றார், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.



latest tamil news


அதன் பொருள் என்னவென்றால், ஆளுங்கட்சியை எதிரி போல பாவித்து, எதிர்க்கட்சித் தலைவர் செயல்படக் கூடாது. மாப்பிள்ளை தோழன் போல தேவையான போது கண்டிக்கணும்; மற்றபடி, அறிவுரை சொல்வதோடு, அனுசரித்தும் போகணும் என்பது தான்.தற்போதைய, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே தவிர, ஆக்கபூர்வமாக ஏதும் சொல்வதில்லை.

பதனீரைக் குடித்த பின், 'இதில் சர்க்கரை போட்டீங்களா?' என கேட்கும் அளவிற்கு தான், அவர் உள்ளார். அவருக்கு நடைமுறை அனுபவம், சுத்தமாக இல்லை என்பது தெளிவு.ஆளுங்கட்சி ஒரு முடிவு எடுத்தால், உடனே ஸ்டாலின் அதை எதிர்க்கிறாரே தவிர, அது பற்றி ஆய்வு செய்து, தீர்வு சொல்லக்கூடிய அளவிற்கு பொறுமை இல்லை.'கொரோனா காலத்தில் பள்ளியை துவக்கப் போகிறோம்' என, அரசு அறிவித்தாலும் எதிர்க்கிறார்; பள்ளித் திறப்பை ஒத்தி வைத்தாலும், குறை சொல்கிறார்.

மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்கிறார். இந்த ஆண்டு, அரசுப்பள்ளி மாணவர்கள், 1,623 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.நீட் தேர்வு என்பது, மருத்துவம் படிக்க தகுதியுள்ள மாணவர்களுக்கானது என்பதை, எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.


latest tamil news


இப்போது கூட, புதிய வேளாண் சட்டம் குறித்து ஏதும் தெரியாமல், பொத்தாம் பொதுவாக, 'இது, பணக்காரர்களுக்கான சட்டம்' என்கிறார்.முதல்வர் இ.பி.எஸ்., பலமுறை, 'வேளாண் சட்டத்தில் உள்ள குறை என்னவென்று கூறுங்கள்' எனக் கேட்டும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏதும் கூறவில்லை; ஆனால், அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்.மத்திய, மாநில அரசுகள் எந்த திட்டம் அறிவித்தாலும், ஸ்டாலின் அதை எதிர்க்கணும் என்ற குறுகிய எண்ணம் கொண்டுள்ளார்.எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சிக்கு அறிவுரை கூற வேண்டும்; எதற்கெடுத்தாலும், எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalingam Dinakharbabu - vellore,இந்தியா
21-டிச-202023:26:06 IST Report Abuse
Mahalingam Dinakharbabu விவசாய சட்டத்தின் நன்மைகள் தான் என்ன?யாராவது பட்டியல் இட முடியுமா...
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
21-டிச-202022:44:42 IST Report Abuse
Sathya well said. Sudalai become insane and lost all sense. he wants Chair
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
21-டிச-202022:08:26 IST Report Abuse
Mannai Radha Krishnan பூனைக்கு யார் மணி கட்டுவது ? ஸ்டாலின் எதை சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். உ.பி ப்ராம்ணன் சொல்வது தான் வேத வாக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X