பொது செய்தி

தமிழ்நாடு

'பார்க்கிங்' இடம் அறிய வருகிறது பிரத்யேக 'ஆப்'

Added : டிச 21, 2020
Share
Advertisement
சென்னை, : சென்னையில், வாகன நிறுத்தும் இடங்களை அறிய, போக்குவரத்து போலீசார் பிரத்யேக செயலியை, உருவாக்கி வருகின்றனர். சென்னையில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக, அண்ணா சாலையில் உள்ள, ஸ்பென்சர், காமராஜர் சாலையில், அண்ணா வளைவு, திருவான்மியூர் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல்களை, விதிமீறல் இல்லா சந்திப்பு என, போலீசார் அறிவித்து உள்ளனர்.அங்கு விதிமீறலில் ஈடுபடும் வாகன

சென்னை, : சென்னையில், வாகன நிறுத்தும் இடங்களை அறிய, போக்குவரத்து போலீசார் பிரத்யேக செயலியை, உருவாக்கி வருகின்றனர்.

சென்னையில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக, அண்ணா சாலையில் உள்ள, ஸ்பென்சர், காமராஜர் சாலையில், அண்ணா வளைவு, திருவான்மியூர் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல்களை, விதிமீறல் இல்லா சந்திப்பு என, போலீசார் அறிவித்து உள்ளனர்.அங்கு விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறுகின்றனர். அதேபோல, 'ஹெல்மெட், சீட் பெல்ட்' அணியாதவர்களுக்கும் எச்சரிக்கை விடப்படுகிறது. அவர்கள், வேறு இடத்தில் விதிமீறலில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

அதேபோல, சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள், கட்டணம் மற்றும் கட்டணமில்லா வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த இடங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், சென்னை போக்குவரத்து போலீசார், பிரத்யேக செயலியை உருவாக்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X