மாதவரம் : மழையால் சேதமடைந்த, மாநகராட்சி குளத்தில் குளித்த வாலிபர், சேற்றில் சிக்கி பலியானார்.
சென்னை, மாதவரம் அடுத்த மணலி, பல்ஜிபாளையம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர், பெரம்பூர், ஐ.சி.எப்.,பில், ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம், 1:00 மணி அளவில், மாதவரம், கே.கே.தாழை, படவேட்டம்மன் கோவில், ஒன்றாவது தெருவில் உள்ள, மாநகராட்சி குளத்திற்கு சென்றார். அங்கு, தன் நண்பர்கள் சிலருடன் குளித்தார்.அந்த குளம், கடந்த மாதம் மழையின்போது, கரைகள் உடைந்து, சேதமாகி புதைகுழியாக மாறி இருந்தது.
அதில், சீரமைப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை.இது குறித்து, கடந்த, 11ம் தேதி, நம் நாளிதழில், செய்தி வெளியானது.இந்த நிலையில், அந்த குளத்தில் குளித்த மணிகண்டன், சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி பலியானார்.தகவல் அறிந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சேற்றில் சிக்கியிருந்த, அவரது சடலத்தை, மாலை, 3:30 மணி அளவில் மீட்டனர். இது குறித்து, மாதவரம் பால் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE