பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை

Added : டிச 21, 2020
Share
Advertisement
சென்னை : நடிகர் விஜய், தன் ரசிகர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார். 'நீங்கள் நினைப்பது விரைவில் நிறைவேறும்; யாரும் மாற்று கட்சியில் சேர வேண்டாம்' என, அப்போது விஜய் கூறியுள்ளது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோ; இதோ என, போக்கு காட்டிய ரஜினி, கால் நுாற்றாண்டை கடந்த நிலையில், தற்போது, அரசியலில் கால் பதிக்கிறார். வாபஸ்சினிமாவில் ரஜினிக்கு

சென்னை : நடிகர் விஜய், தன் ரசிகர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார். 'நீங்கள் நினைப்பது விரைவில் நிறைவேறும்; யாரும் மாற்று கட்சியில் சேர வேண்டாம்' என, அப்போது விஜய் கூறியுள்ளது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதோ; இதோ என, போக்கு காட்டிய ரஜினி, கால் நுாற்றாண்டை கடந்த நிலையில், தற்போது, அரசியலில் கால் பதிக்கிறார். வாபஸ்சினிமாவில் ரஜினிக்கு போட்டியாக இருந்த கமல், லோக்சபா தேர்தலிலேயே, அரசியலுக்கு வந்து விட்டார். இந்த வரிசையில், நடிகர் விஜய் பெயரும் அடிபட்டு வந்தது. சமீபத்தில், இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், கட்சி ஒன்றை பதிவு செய்தார். குடும்பத்தாரின் ஒத்துழைப்பின்மை மற்றும் விஜய்யின் கடும் எதிர்ப்பால், கட்சி பதிவை வாபஸ் பெற்றார்.

இதனிடையே, சந்திரசேகர் ஆதரவு நிர்வாகிகளை, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கிய விஜய், தொடர்ந்து புதிய நிர்வாகிகளை நியமித்தார்.மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பும் வர உள்ள நிலையில், இரண்டு நாட்களாக, சென்னையை அடுத்த பனையூரில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்தும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவும், விஜய் பேசியுள்ளார். விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், நேற்று முன்தினம், நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகிகள்; நேற்று, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இதில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி துவங்கியது;

அதனால், விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள சலசலப்பு; வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.விரைவில் நடக்கும்நிர்வாகிகளிடையே பேசிய விஜய், 'இயக்க நிர்வாகிகள் யாரும், மாற்று கட்சியில் சேர வேண்டாம்; நீங்கள் நினைப்பது போல, அனைத்தும் விரைவில் நடக்கும்' என, கூறியுள்ளார். விஜயின் நம்பிக்கை பேச்சு, அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துஉள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X