சென்னை : அதிக பாடப்பிரிவுகள் துவங்குவதால், பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரிக்கு, 2.14 கோடியில், கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடக்கிறது.
பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி, 2016ல் துவக்கப்பட்டது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 35 வகுப்பறைகள் உள்ளன.படிப்படியாக, அதிக பாடப்பிரிவுகள் துவங்க உள்ளதால், கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டன. இதையடுத்து, கூடுதல் வகுப்பறைகள் கட்ட, தமிழக அரசு, 2.14 கோடி ரூபாய் ஒதுக்கியது.மொத்தம், 10 ஆயிரத்து, 500 சதுர அடி பரப்பு கொண்ட, மூன்றடுக்கு கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது.எட்டு வகுப்பறைகள், இரண்டு அலுவலகம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. தற்போது, 35 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.
ஆறு மாதத்தில், அனைத்து பணிகளையும் முடித்து, வகுப்பறையை கல்லுாரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE