சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை பற்கள் பறிமுதல்

Added : டிச 21, 2020
Share
Advertisement
சென்னை : துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, சிறுத்தை பற்களை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வளைகுடா நாடுகளில் இருந்து, வன உயிரினங்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஐக்கிய அரபு நாடுகளில்

சென்னை : துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, சிறுத்தை பற்களை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வளைகுடா நாடுகளில் இருந்து, வன உயிரினங்களின் உறுப்புகள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, துபாய் நகரிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 8:15 மணிக்கு, சென்னை வந்தது.அந்த விமான பயணியர் இறங்கியவுடன், சுங்கத்துறையினர் விமானத்திற்குள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஓர் இருக்கையின் பக்கவாட்டு பகுதியில், இரண்டு டிஷ்யு பேப்பர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதைப் பிரித்து பார்த்தபோது, அதன் உள்ளே மூன்று பற்கள் மற்றும் சாம்பல் நிறத்திலான பொடி இருப்பது தெரிந்தது. இந்த பற்களை, மத்திய வன குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆராய்ந்து, அவை சிறுத்தையின் கோரைப்பற்கள் என்பதை கண்டறிந்தனர்.இந்த பற்கள், தாம்பரத்தில் உள்ள, மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனத்திற்கு, ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுத்தை பற்களை கடத்தியவர்களை, சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய விலங்குகளின் கோரைப்பற்களை, நகையில் பதித்து அணிவதால், அதிர்ஷ்டம் பெருகி, வாழ்கையில் வளம் பெற முடியும் என நம்பப்படுகிறது. இதுபோன்று, பற்களை நகைகளில் பதித்து, சீனர்கள் அதிகம் அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X