பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை சான்று கட்டாயம்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவனந்தபுரம் : 'கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்' என, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம், 15ல் நடை திறக்கப்பட்டது. கோவிலில், மண்டல பூஜை, வரும், 26ம்
Sabarimala, Lord Ayyappa, Covid Test, Sabarimala Temple

திருவனந்தபுரம் : 'கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்' என, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம், 15ல் நடை திறக்கப்பட்டது. கோவிலில், மண்டல பூஜை, வரும், 26ம் தேதி நடக்கிறது. அதன் பின் கோவில் நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக, 31ம் தேதி, நடை மீண்டும் திறக்கப்படுகிறது.


latest tamil news


கொரோனா பரவல் காரணமாக, தினமும், 1,000 பக்தர்கள் மட்டுமே, சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை, 5,000 ஆக உயர்த்த, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:

சபரிமலையில், வரும், 26ம் தேதி முதல், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களிடம், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேணடும். அதுவும், தரிசன நேரத்துக்கு முன், 48 மணி நேரத்துக்குள் சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்ற சான்று பெற்றவர்கள் மட்டுமே, ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
21-டிச-202009:36:31 IST Report Abuse
Sivagiri கேரளாக்காரனுக்கு இந்திய ப்ரஜை சான்றிதழ் கட்டாயம் ஆக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X