பொது செய்தி

இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : தொழில் துவங்குவதை எளிதாக்கும் சீர்திருத்த நடவடிக்கையை முழுமையாக நிறைவேற்றியதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள், கூடுதலாக, 16 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் கடன் பெற, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.'எளிதாக தொழில் துவங்குவதற்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு, கூடுதலாக கடன் பெற
Finance Ministry, Permits, Five States, Borrow

புதுடில்லி : தொழில் துவங்குவதை எளிதாக்கும் சீர்திருத்த நடவடிக்கையை முழுமையாக நிறைவேற்றியதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள், கூடுதலாக, 16 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் கடன் பெற, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

'எளிதாக தொழில் துவங்குவதற்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு, கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்படும்' என, மத்திய அரசு, கடந்த மே மாதம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும், மாவட்ட அளவிலான வர்த்தக சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இம்மாநிலங்கள் கூடுதல் கடன் பெற, மத்திய நிதி அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கான பதிவுச் சான்று பெறுதல், சான்றுகளைப் புதுப்பித்தல், அங்கீகாரம் வழங்குதல், ஒப்புதல் அளித்தல் போன்றவற்றுக்கான தேவைகளை நீக்குவது, இந்தச் சீரமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.


latest tamil news



இது குறித்து மத்திய நிதி அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலால், பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசுகளின் கூடுதல் நிதித் தேவையை நிறைவு செய்ய, கடந்த மே மாதம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாநில அரசு கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதம், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில், 3 சதவீதம் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாநில அரசுகள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு, எளிதாக வர்த்தகம் செய்யும் சீரமைப்பு விதிகள், நகர உள்ளாட்சி சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதுவரை, 10 மாநிலங்கள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும், ஐந்து மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் சீரமைப்பு விதிகளையும், இரண்டு மாநில அரசுகள், உள்ளாட்சி சீர்திருத்தங்களையும் முழுமையாக செய்து முடித்துள்ளன.

எளிதாக வர்த்தகம் செய்வதற்கான சீரமைப்பு விதிகளை, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகளும், முழுமையாக செயல்படுத்தி உள்ளன. இந்த ஐந்து மாநில அரசுகளும், வெளிச்சந்தையில் கூடுதலாக, 16 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-டிச-202020:55:52 IST Report Abuse
Ramesh Sargam மத்திய நிதி அமைச்சகம் என்னமோ கூடுதல் கடன் பெற அனுமதி அளித்துவிடுகிறது. ஆனால் அதை திருப்பி யார் செலுத்துகிறார்கள் தெரியுமா? அது யார் தலையில் விழுந்த பாரம் தெரியுமா? வேற யாரு, வரி செலுத்தும் மக்கள்தான். ஆக, அதிகம் வரி செலுத்த எல்லா மக்களும் தயாராக இருங்கள்.
Rate this:
Cancel
21-டிச-202009:56:21 IST Report Abuse
ஆப்பு மத்திய அரசு gst யை வாங்கி முடிஞ்சிக்கிட்டு மாநில அரசுகளை கடன் வாங்க அனுமதிக்கிறது... அடுக்குமா கோவாலு?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-டிச-202008:14:16 IST Report Abuse
RajanRajan தமிழக அரசு கடன் வாங்க அனுமதி கிடைத்துள்ளது. பார்த்துப்பா முருவா ஏற்கனவே லட்ச்சம் கோடிகள் கடனில் அம்மாவழி ஓடிக்கிட்டு இருக்குது. இதுதான் சாக்குன்னு இந்த கடன் தொகையிலே ஆட்டைய போட்டுடாம உருப்படியா மக்கள் நலன் தேச நலனை கருத்தில் கொண்டு லஞ்சம் இல்லாமல் செயல் பட வாழ்த்துறோம்பா. எங்களால முடிஞ்சது இதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X