அரசியல் செய்தி

தமிழ்நாடு

காந்தி என் தாத்தா; எம்.ஜி.ஆர்., வாரிசு நான்: கமல்

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement
சென்னை: 'நல்லவை நினைக்கும் எல்லாருமே, எம்.ஜி.ஆரின் வாரிசு தான். நானும், எம்.ஜி.ஆரின் வாரிசு தான்; காந்தி என் தாத்தா' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் நடந்த பிரசாரத்தில், கமல் பேசியதாவது:போரூர் என்ற கிராமம், நகரமாக அதி வேகமாக வளர்ந்து விட்டது; ஆனால், ஆதார வசதிகள் வளரவில்லை. மதுரவாயல் தொகுதியில், பெண்கள் தண்ணீருக்காக
Kamal, Kamal Haasan, MNM, MGR, கமல், கமல்ஹாசன்

சென்னை: 'நல்லவை நினைக்கும் எல்லாருமே, எம்.ஜி.ஆரின் வாரிசு தான். நானும், எம்.ஜி.ஆரின் வாரிசு தான்; காந்தி என் தாத்தா' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை, போரூரில் நடந்த பிரசாரத்தில், கமல் பேசியதாவது:போரூர் என்ற கிராமம், நகரமாக அதி வேகமாக வளர்ந்து விட்டது; ஆனால், ஆதார வசதிகள் வளரவில்லை. மதுரவாயல் தொகுதியில், பெண்கள் தண்ணீருக்காக அலைகின்றனர். இங்கே நிலத்தின் விலை உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்வதார நிலை உயரவில்லை.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை, 10 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் காத்திருக்கிறது. திருடர்கள் வராமல், நேர்மையானவர்கள் பதவிக்கு வந்தால் அனைத்தும் நடக்கும்.சிலர், 'தேர்தலால் தான், எம்.ஜி.ஆரை கமல் சொந்தம் கொண்டாடுகிறார்' என்கின்றனர். அவர்கள் செவிடர்களாகவும், குருடர்களாகவும் இருந்துள்ளனர்.


latest tamil news



எங்கள் முதல் கோஷமே, 'நாளை நமதே' என்பது தான். மீண்டும், அவர் பெயரை சொல்லி காசு பார்க்கும் கூட்டம் எங்களுடையது இல்லை. நாங்கள் காந்தி, எம்.ஜி.ஆர். பெரியார், அம்பேத்கர் பெயர்களையும் சொல்கிறோம்.

ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வந்து உணவருந்த வேண்டும் என்று நினைத்த, எம்.ஜி.ஆரின் கருணை எங்களுக்கு இருப்பதால், நாங்கள் அவரது நீட்சி தான். நல்லவை நினைக்கும் எல்லாருமே, எம்.ஜி.ஆரின் வாரிசு தான். நானும், எம்.ஜி.ஆரின் வாரிசு தான். இதை பட்டயம் போட்டு விற்க புறம்போக்கு நிலம் அல்ல. எம்.ஜி.ஆர்., உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அவர் மக்கள் திலகம். காந்தி என் தாத்தா. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-டிச-202014:24:38 IST Report Abuse
Swaminathan Chandramouli எம்ஜியாருக்கு நேரடி வாரிசு கிடையாது ஜானகி அம்மாளின் நெருங்கிய உறவினர்கள் தான் அவருடன் குடும்பமாக இருந்தனர் அதெப்படி கமலஹாசன் தன்னை எம்ஜியாரின் வாரிசு என்று பறைசாற்றுகிறார்
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
22-டிச-202006:00:30 IST Report Abuse
Aanandh தேர்தல் நெருங்க நெருங்க, காமஹாசனுக்கு, பிதற்றல் ஜாஸ்தி ஆகி, ஸ்டாலின், உதயநி தி போன்றவர்களிடம் புகலிடம் தேடுகிறார்.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22-டிச-202000:30:08 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam மஹாத்மா காந்தி அவர்கள் எல்லோருக்கும் தாத்தாதான். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எல்லோருக்கும் சொந்தம்தான். அனால், கமால் ஹசான் ஒருபோதும் எம்ஜிஆர் அவர்களின் வாரிசாக இருக்க முடியாது. எம்ஜிஆர் அவர்களின் கலையுலக வாரிசு பாக்கியராஜ் தான். அரசியல் இலாபத்திற்காகப் புரட்சித்தலைவரின் பெயரைப் பயன்படுத்துவது மாமனிதர் எம்ஜிஆர் அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X