பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு ரூபாய் 2,500 வங்கி கணக்கில் செலுத்தப்படுமா?

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, ஆண்டு தோறும், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்தாண்டு பொங்கல்
பொங்கல்_பரிசு, வங்கிக்கணக்கு, வரவு, ரூ.2,500

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு, ஆண்டு தோறும், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்தாண்டு பொங்கல் பரிசு தொகையாக, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பில், 'பொங்கலை முன்னிட்டு, 2.06 கோடி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய்; தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு வழங்கப்படும்.'ஜன., 4 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.


latest tamil newsஅதற்கு முன், எந்த தேதிக்கு கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன், கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளதால், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் அவசரத்துடன், 'முதலில் வாங்க வேண்டும்' என்ற எண்ணத்துடனும், பலரும், கடைகள் முன் கூட்டம் சேருவர். இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தங்கள் முன்னிலையில் தான், பணத்தை வழங்க வேண்டும் என, ஆளுங்கட்சியினரும், கடைகள் முன் கூடுவர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர் கட்சியினரும் வர வாய்ப்புள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம்.


latest tamil news


இதை தவிர்க்க, 2,500 ரூபாய் ரொக்கத்தை, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில், ஒவ்வொரு கார்டுதாரருக்கும், பொங்கல் பொருட்களுடன், 2,500 ரூபாயை வழங்க, அதிக நேரமாகும். பலரும், பணம் வாங்கவே முன்னுரிமை தருவர். மத்திய அரசின், 'ஆதார்' எண் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான ஏழை மக்கள், வங்கி கணக்குகளை துவக்கியுள்ளனர்.

வங்கி கணக்கும், 'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களிடம் இருந்து, அவர்களின் ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை பெறலாம். பொது வினியோக திட்ட இணையதளம் வாயிலாகவும், வங்கி கணக்கு விபரங்களை பெறும் வசதி உள்ளது. இந்த பணியை, ஐந்து நாட்களுக்குள் முடிக்கலாம். பின், கார்டுதாரரின் வங்கி கணக்கிற்கு, பொங்கல் பரிசு தொகையான, 2,500 ரூபாயை நேரடியாக வரவு வைக்கலாம். இந்த முறையால், கடைகளில் கூட்டம் சேருவது தடுக்கப்படும். பணம் வழங்குவதிலும் முறைகேடும் நடக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
22-டிச-202003:42:32 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga கொரோனா பரவல் தற்போது தான் கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது. அரசு ஒருபுறம் கொரோனாவை காரணம் காட்டி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திடுகிறது. மறுபுறம், இந்த இலவசத்தை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டத்தை சேர்த்தால், திரும்பவும் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம். எனவே, கடந்த முறை, புயல் நிவாரணம், வெள்ளம் நிவாரணம் போன்ற வற்றுக்கு வங்கிக்கணக்கில் செலுத்தி எடப்பாடி அரசு நல்ல பெயர் வாங்கியதைப்போல, இப்போதும், வங்கியில் செலுத்தினால் நல்லது. அனாவசிய கூட்டங்களை ரேஷன் கடைகளில் தவிர்க்கலாம். ஊருக்குப்போக வேண்டியவர்கள் சிரமமின்றி சென்று வரலாம். கூட்டுறவு பணியாளர்களின் தில்லு முல்லுகளை தவிர்க்கலாம். பொறுத்து இருந்து பார்க்கலாம்.
Rate this:
Cancel
M suresh - tamil nadu,இந்தியா
21-டிச-202019:52:38 IST Report Abuse
M suresh இலவசங்களை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
21-டிச-202017:08:22 IST Report Abuse
Mayavan Mayavan நாங்க ரெடி நீங்க ரெடியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X