பொது செய்தி

இந்தியா

மத்தியில், ஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாததால் தான், காங்கிரசை வீட்டுக்கு அனுப்பி விட்டனரோ...

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சரித்திரத்தில் சாதனை படைத்தவர்கள், புகழ் பெற்றவர்களை பற்றி பேசி, நிகழ்கால தேர்தலில் ஓட்டுகளை பெற முடியாது. அடுத்த, ஐந்தாண்டுகளில் என்ன செய்யப் போகிறோம், என்று கூறினால் தான், ஓட்டுகளை பெற முடியும்.- காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்'உண்மை தான். மத்தியில், ஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாததால் தான், காங்கிரசை வீட்டுக்கு அனுப்பி விட்டனரோ...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும்
மத்தியில், ஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாததால் தான், காங்கிரசை வீட்டுக்கு அனுப்பி விட்டனரோ...

சரித்திரத்தில் சாதனை படைத்தவர்கள், புகழ் பெற்றவர்களை பற்றி பேசி, நிகழ்கால தேர்தலில் ஓட்டுகளை பெற முடியாது. அடுத்த, ஐந்தாண்டுகளில் என்ன செய்யப் போகிறோம், என்று கூறினால் தான், ஓட்டுகளை பெற முடியும்.
- காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்


'உண்மை தான். மத்தியில், ஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாததால் தான், காங்கிரசை வீட்டுக்கு அனுப்பி விட்டனரோ...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.



அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினி, 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அவரிடம் இருந்த ரசிகர்கள், பல அரசியல் கட்சிகளில் சேர்ந்துவிட்டனர். எந்த கணிப்பில் அவர், அரசியலுக்கு வருகிறார் என்பது, அவருக்குத் தான் தெரியும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன்


'எந்த கணிப்பில், எந்த எண்ணத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றனவோ, அதன்படி தான், ரஜினியும் வருகிறார்; எல்லாம், 'மக்கள்' சேவைக்காகத் தான்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், மாநில திட்டக்குழு துணைத்தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பேட்டி.



வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தவறான பிரசாரங்கள் நடக்கின்றன. விவசாயிகள் மற்றும் மக்களுக்கு இடையே உள்ள கமிஷன் ஏஜன்டுகள், பொய் பிரசாரம் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இதை தீர்ப்பதற்காக தமிழகத்தில், 1,000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து, வேளாண் சட்டங்களின் உண்மை நிலை குறித்து தெரிவிக்க உள்ளோம்.
- பா.ஜ., மாநில துணைத்தலைவர் நரேந்திரன்


'எதிர்க்கட்சிகள் பிரசாரம், உங்களின் சமாளிப்பு பிரசாரத்தை துாக்கி சாப்பிட்டு விடும் போலிருக்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் நரேந்திரன் பேட்டி.



ம.நீ.ம., தலைவர் கமலுக்கு அரசின் நிதி, நிர்வாகம் குறித்து தெரியாது. அவர் இன்றும் சினிமா வசனங்களை தான் பேசி வருகிறார். அவர் அரசியல் தலைவர் இல்லை; நடிகர் மட்டுமே.
- அமைச்சர் ராஜு


latest tamil news




'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., பேசிய சினிமா வசனங்களைத் தானே, உங்கள் கட்சியில் நிறைய பேர் இன்னமும் உண்மை என நம்பிக் கொண்டிருக்கின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுவுத்துறை அமைச்சர் ராஜு பேட்டி.



வேளாண் சட்டங்களை திருத்துவதற்கான விதையை விதைத்ததே காங்கிரஸ் தான். காரணகர்த்தாவாக இருந்த காங்கிரசை சுட்டிக் காட்டாமல், பா.ஜ., மோடி என்று, தி.மு.க., பேசுவதிலிருந்தே தெரிகிறது, இது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே.
- தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமலிங்கம்


'காங்., திருத்திய சட்டங்களைத் தான், பா.ஜ., செயல்படுத்துகிறது என்றால், பா.ஜ.,வுக்கு சொந்த மூளை இல்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும், தி.மு.க., முன்னாள் எம்.பி.,யுமான ராமலிங்கம் அறிக்கை.



ரஜினி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால், கமல் ஹாசனும் இதுவரை எதுவும் செய்யவில்லை. கமல் அரசியலுக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது என்றால், ரஜினிக்கும் உரிமை உள்ளது.
- பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா


'செய்வோம் என சொல்லி ஆட்சிக்கு வந்த, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் செய்தனரா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா பேட்டி.



2019ல், 'கஜா' புயலின் போது, ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். இடைத் தேர்தலால், கோர்ட் உத்தரவுபடி செயல்படுத்தப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட, 1,200 கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை.
- தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத்


'புயல்கள் தான் தொடர்ந்து வருகின்றனவே... அதற்காக கையிருப்பில் வைத்திருப்பர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
22-டிச-202006:11:20 IST Report Abuse
spr சரித்திரத்தில் சாதனை படைத்தவர்கள், புகழ் பெற்றவர்களை பற்றி பேசி, நிகழ்கால தேர்தலில் ஓட்டுகளை பெற முடியாது. அடுத்த, ஐந்தாண்டுகளில் என்ன செய்யப் போகிறோம், என்று கூறினால் தான், ஓட்டுகளை பெற முடியும்.- உண்மையே காங்கிரஸ் காங்கிரஸாக இருந்த வரையில் நடந்ததுதான் பல சிறப்பான திட்டங்கள் அதற்குபின் ராஜீவ் காலம் கூடப் பரவாயில்லை முழுக்க முழுக்க சோனியா காங்கிரஸாக அது மாறிய போதுதான் தேக்கம் ஏற்பட்டது ஊழல் பெருகியது பீஷ்ம பிதாமகர் மன்மோகன் சிங் வாய் மூடி மௌனியாக அந்த ஊழலுக்குத் துணை நின்றார் அந்த காலத்தில் தப்பித்த தவறி ஏதேனும் நல்லது நடந்திருந்தால் அது இந்தியர்களின் நல்ல காலம் அவ்வளவே. காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலியாக சுயநலமில்லாதவர்களாக இருந்தால் இந்த திட்டங்களை நாங்கள் ஆரம்பித்தோம் இன்று மோடி முடிக்கிறார் நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூற வாய்ப்பிருந்தது மனம் இல்லை
Rate this:
Cancel
P. Siresh - Chennai,இந்தியா
22-டிச-202005:20:56 IST Report Abuse
P. Siresh இவர்கள் பேச்சு வீரத்தை எல்லாம்,கூட்டணியில் இருந்து வெளியே வந்து தனியாக நின்று சொல்லட்டும்.67 ல் தமிழ் நாட்டை விற்றவர்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
21-டிச-202020:13:13 IST Report Abuse
கொக்கி குமாரு ஓவியர் கார்த்தி சிதம்பரத்தை வரைய சொன்னால் முட்டை போண்டாவை வரைந்து கொடுத்திருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X