ஈரோடு: ஊதிய உயர்வு வழங்க அரசாணை வெளியிட்டும், ஏமாற்றம் அளிப்பதாக, ஊராட்சி தூய்மை காவலர்கள், வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி., சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளன, மாநில பொது செயலாளர் சின்னசாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு, 2018 ஏப்., முதல், ?,600 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதை, 3,600 ஆக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் மார்ச், 16ல் உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அரசாணை பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தினர். அரசாணை பிறப்பித்து ஊதிய உயர்வை வழங்க, பல்வேறு போராட்டங்களை ஏ.ஐ.டி.யு.சி., நடத்தியது. இந்நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் தூய்மை காவலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆனால், அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்துதான், ஊதிய உயர்வு வழங்கப்படும் எனக்கூறியிருப்பது, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் அறிவித்த தேதியில் இருந்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE