பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் செயல் அலுவலர் மாற்றம்: புகார்கள் குவிந்ததே காரணம்?

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்களின் செயல் அலுவலராக கங்காதரன் பணியாற்றினார். திருப்பூர் மாவட்டம் அவினாசி, திருமுருகன் பூண்டி ஈஸ்வரன் கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்களின் செயல் அலுவலராக கங்காதரன் பணியாற்றினார். திருப்பூர் மாவட்டம் அவினாசி, திருமுருகன் பூண்டி ஈஸ்வரன் கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் பிறப்பித்துள்ளார். இதையடுத்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், கூடுதல் பொறுப்பாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாண்டுகளுக்கு மேல் ஆனதால், கங்காதரன் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியுள்ள நிலையில், இடமாற்றம் நடந்ததால், அவர் மீது பல்வேறு புகார்கள், கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றதே, காரணம் என்றும், பேச்சு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X