மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு புவியியலாளர் மற்றும் சுரங்கத்துறை உதவி துணை இயக்குனர் ஜெகதீஸ், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, கேட்புதூர் அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டார். கரூரிலிருந்து ஈரோட்டுக்கு மணல் ஏற்றி வந்த, ஒரு டிப்பர் லாரியில், உரிய ஆவணமில்லை. லாரியை பறிமுதல் செய்து, மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் லாரி டிரைவர், இடைப்பாடியை சேர்ந்த கோவிந்தராஜ், உரிமையாளர் சக்திவேல் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE