ஈரோடு: ஈரோட்டில், டூவீலர் டேங்க் கவரில் வைத்திருந்த, 3.50 லட்சம் ரூபாய், திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, வில்லரசம்பட்டி, நால்ரோட்டை சேர்ந்த ராஜூ மகன் ஹரிபிரசாத், 26; நூல் மில் மேலாளர். ஈரோடு, குமலன்குட்டை இந்தியன் வங்கியில் இருந்து, கடந்த, 16ம் தேதி காலை, மூன்றரை லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு, டூவீலர் டேங்க் கவரில் வைத்து, மில்லுக்கு சென்றார். மில்லுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு, பணத்தை எடுக்காமல் சென்றவர், சிறிது நேரம் கழித்து பணத்தை எடுக்கவந்தபோது காணவில்லை. அவர் பைக்கை நோக்கி வந்தபோது, இரு வாலிபர்கள் மற்றொரு பைக்கில், வேகமாக சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகள் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE