சேலம்: தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க, பார்வையற்ற ஆசிரியர்கள், தமிழக அரசை வலியுறுத்தினர். சேலம் கிளை, பார்வையற்றோர் ஆசிரியர் சங்க, பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கிளை தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். அதில், அரசுத்துறை, பதவி உயர்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல்; தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்ற ஆசிரியர்களை, பணி நியமனம் செய்தல்; புத்தகம் கட்டுனர் உள்ளிட்ட தொழில் பயிற்சி முடித்த பார்வையற்றவர்களை, கருணை அடிப்படையில் நியமித்தல்; மாற்றுத்திறனாளிகள், 2016 உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தலைவராக கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் வடிவேல், செயலர் கருணாநிதி உள்பட, 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE